ஜவுளித்துறையினரின் ஜாப் ஒர்க்கிற்கு விலக்கு அளித்துள்ள தமிழக அரசு, இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கிற்கு விலக்கு அளிக்காததால் கோவை தொழில்துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். உள் மாநிலத்திற்குள் தொழில் உற்பத்தி பொருள்களை கொண்டு செல்ல மின்னணு முறையில் தரவிறக்கம் செய்யப்பட்ட இ-வே பில் உடன் வைத்திருக்க வேண்டும் என்கிற நடைமுறை கடந்த 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ஜவுளித்துறை சார்ந்த ஜாப் ஒர்க் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கிற்கு விலக்கு அளிக்கவில்லை. இதனால் கோவை மாவட்ட தொழில்துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் உள்ளது. இதில் கிரைண்டர், பம்ப்செட், பவுண்டரி, ஜவுளி இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் பொருள் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் ஜாப் ஒர்க் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இன்ஜினியரிங் பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் மூலப்பொருள்களை குறுந்தொழில்கூடங்களுக்கு அளித்து, அதை உதிரிபாகங்களாக பெற்று வருகின்றனர். இத்தகைய ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஆண்டிற்கு ரூ.20 லட்சம் மதிப்பிற்கு மேல் வர்த்தகம் மேற்கொண்டால் ஜிஎஸ்டியில் 18 சதவீதம் உள்ளது. அதற்கு கீழ் உற்பத்தி மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்களுக்கு விலக்கு உள்ளது. இதில் 80 சதவீத குறுந்தொழில் கூடங்கள் ஆண்டிற்கு ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்பவை. அவை ஜிஎஸ்டியில் வராவிட்டாலும், அவற்றிற்கு பதிலாக ஜாப் ஒர்க் நிறுவனங்களே 18 சதவீத வரி செலுத்த வேண்டும், என்கிற நடைமுறை உள்ளது. இதனால் ஜாப் ஒர்க் கொடுக்கும் நிறுவனங்கள், ரூ.20 லட்சத்திற்கு கீழ் உள்ள குறுந்தொழில் கூடங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஜாப் ஒர்க் கொடுக்கின்றன. இதனால் அனைத்து குறுந்தொழில் கூடங்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஜிஎஸ்டியின் கீழ் வந்துள்ளன. இதனால், குறுந்தொழில் கூடங்கள் மாதம்தோறும் தாங்கள் மேற்கொள்ளும் வர்த்தகத்திற்கான 18 சதவீத வரியை அரசிற்கு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தொகையை ஜாப் ஒர்க் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து பெற 3 மாதம் ஆகிறது. இதனால் குறுந்தொழில் கூடங்கள் தங்கள் கையிருப்பில் இருந்து வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக குறுந்தொழில் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜாப் ஒர்க்கிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கும்படி கடந்த 10 மாதமாக கோரி வருகிறோம். இந்நிலையில், தற்போது உள் மாநிலத்திற்குள் அமல்படுத்தப்பட்டுள்ள இ-வே பில் நடைமுறையில், இன்ஜினியரிங் தொழில் துறைக்கு விலக்கு அளிக்காததால் இன்ஜினியரிங் பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கோவையிலுள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு நெருக்கடி தீரவில்லை. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.