Wednesday, 6 June 2018

அரசு பள்ளி வணிகவியல் மாணவர்களை ஊக்குவிக்க சி.ஏ.பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சி.ஏ.தொடர்பான பயிற்சி அளிக்க அகில இந்திய பட்டைய கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது

பள்ளி கல்வித்துறை மற்றும் பட்டைய கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் மாணவர்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் இதன் மூலம் 3-ஆயிரத்து 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் இதேப்போன்று 1000-அரசு பள்ளிகளை தேர்வு செய்து வணிகவியல் மாணவர்களுக்கு சி.ஏ.தொடர்பான வழிகாட்டும் பயிற்ச்சியினை அளிக்க உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 comment:

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.