Thursday, 7 June 2018

திவால் சட்டம் விதிகள் திருதம்

வீடு வாங்குபவர்களை பாதுகாக்கும் வகையிலான திவால் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய திவால் சட்டத்தில் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வீடு வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிமுறைகளில் சலுகை வழங்கவும் திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பல்வேறு தரப்புகளில் கருத்துக்களை கேட்டு கடந்த மார்ச் மாதம் பரிந்துரையை சமர்ப்பித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பிறகு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதில், வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக செயல்படும் கட்டுமான நிறுவனங்களால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படுகின்றனர். புதிய திருத்தத்தில், வீடு வாங்குவோருக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நிதி முதலீட்டாளர்களாக கருதப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மோசடி நிறுவனங்களுக்கு எதிராக திவால் சட்ட பிரிவு 7ன்படி நடவடிக்கை எடுத்து இவர்கள் நிவாரணம் பெறலாம். வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் கடன் மோசடி செய்தவர்கள், தங்கள் சொத்துக்களை ஏலம் எடுக்க புதிய திவால் சட்டம் தடை செய்கிறது. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்தாமல் நிறுவனம் ஏலத்துக்கு வரும்போது, இவர்கள் அந்த ஏலத்தில் பங்கேற்க இந்த திருத்தம் வகை செய்கிறது. நிறுவன திவால் தீர்வு நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற உடனடி சலுகையும் வழங்கப்படுகிறது. வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவராக இருக்கும் வரைதான் இந்த பாதுகாப்பு சலுகை அவருக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.