Thursday, 7 June 2018
உயிர்ச்சான்று எளிய முறை மூலம் பெறுதல்...
சென்னை: ஜீவன் பிரமாண் திட்டத்தில் பிஎப் ஓய்வூதியதாரர்கள் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலமாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். நடமாட முடியாமல் மூப்பு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே உயிர்ச்சான்று பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான கூடுதல் மத்திய பிஎப் ஆணையர் கி.வே. சர்வேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: பிஎப் ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் உயிர்ச் சான்று (ஜீவன் பிரமாண்) சமர்பிக்க வேண்டும். கீழ்க்காணும் எளிய முறைகளில் இந்த சான்றை சமர்ப்பிக்கலாம். ஆதார் அடிப்படையிலான ஜீவன் பிரமாண் பத்திரத்தை தங்களது இல்லத்தின் அருகிலுள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.. ஆதார் சேர்க்கை அல்லது இணைப்பு வசதியுள்ள வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். ஆதார் இணைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள வங்கி கிளைகள் பட்டியல் www.uidai.gov.in இணையதளத்தில் உள்ளது. உமங்க் மொபைல் ஆப் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க இயலாதவர்கள் காகித வடிவ சான்றிதழை அளிக்கலாம். இதுதவிர, மூப்பு, நோய் காரணமாக நடமாட முடியாத ஓய்வூதியர்கள் மேலே கூறப்பட்டுள்ள எந்த ஒரு வழியிலும் உயிர்ச்சான்று சமர்ப்பிக்க முடியாவிட்டால், வீட்டுக்கே வந்து ரேகை பதிவு மூலம் உயிர்ச்சான்று பெறும் வசதியும் உள்ளது. உயிர்ச்சான்று சமர்பிப்பதில் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பிஎப் மண்டல ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டும், acc.tnkr@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் அளித்தும் உதவி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Labels:
guide
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.