Friday, 8 June 2018

உரிமை கோராத பணம்...குறைந்த வட்டி விகிதம்...

உரிமை கோராத டெபாசிட்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அரை சதவீதம் குறைத்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்கள், உரிமை கோராத டெபாசிட்களாக கருதப்படுகின்றன. இந்த பணம் முதலீட்டாளர் கல்வி நிதியில் சேர்க்கப்பட்டு, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணம் யாரும் உரிமை கோராமல் கிடக்கிறது. இவற்றை அவர்கள் வாரிசுகள் யாரேனும் உரிய ஆதாரங்களோடு கோரினால், அவர்களிடம் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியுடன் பணம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வட்டியை ரிசர்வ் வங்கி 3.5 சதவீதமாக குறைத்துள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து இது அமலுக்கு வருகிறது. எனவே, அடுத்த மாதம் 1ம் தேதிக்கு பிறகு உரிமை கோரப்படும் டெபாசிட்களுக்கு 3.5 சதவீத வட்டி கணக்கிடப்படும்.பயிர்க்கடன்: விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடன் வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு ஆண்டுக்கு ₹15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நடப்பு ஆண்டில் ₹3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்களுக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் ₹3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். முறையாக திருப்பி செலுத்தினால் வட்டி 4 சதவீதமாக குறைந்துவிடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.